இலங்கைத் தூதுவருக்கு ஓமானில் பாராட்டு | தினகரன்

இலங்கைத் தூதுவருக்கு ஓமானில் பாராட்டு

ஓமான் நாட்டில் வசிக்கும் இலங்கையர்களால் இரத்த தானம் மற்றும் அதற்கான பிரச்சாரங்களை ஏற்பாடு செய்வதில் தொடர்ச்சியான ஆதரவு வழங்கியமைக்காக அந்நாட்டின் சுகாதார அமைச்சின் இரத்த வங்கி சேவைகள் திணைக்களத்தினரால் இலங்கைத் தூதுவர் O.L. அமீர் அஜ்வத் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வு அண்மையில் ஓமான் தலைநகரான மஸ்கத்தில் அமைந்துள்ள கிராண்ட் மிலேனியம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஓமான் மக்களுடன் இணைந்து இலங்கை சமூகம் மனிதாபிமான ஒற்றுமையை வெளிப்படுத்தியமையை அடையாளப்படுத்தும் முகமாக ஓமான் சுகாதார அமைச்சின் திட்டமிடல் துணை செயலாளர் டாக்டர் அலி பின் தலிப் அல் ஹினாய், தூதுவர் அமீர் அஜ்வாத்துக்கு நினைவு பரிசினை வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் ஓமான் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


Add new comment

Or log in with...