எல்பிட்டிய தேர்தலை இடைநிறுத்த கோரி மனு | தினகரன்

எல்பிட்டிய தேர்தலை இடைநிறுத்த கோரி மனு

புதிதாக வேட்புமனுக்களை கோராமல் தேர்தலை நடத்தக்கூடாது என தெரிவித்து, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை இடைநிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பிரதேசவாசிகள் மூவர் இம்மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த மனுவில், எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய வர்த்தமானி அறிவிப்பு, தேர்தல்கள் ஆணைக்குழு கூடாமல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது விதி முறைகளுக்கு மாறானது.

2017ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுவதாகவும் மனுதாரர்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, குறித்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...