மகேந்திரனின் நாடு கடத்தல் கோரிக்கை சிங்கப்பூர் அரசிடம் | தினகரன்


மகேந்திரனின் நாடு கடத்தல் கோரிக்கை சிங்கப்பூர் அரசிடம்

மகேந்திரனின் நாடு கடத்தல் கோரிக்கை சிங்கப்பூர் அரசிடம்-Arjun Mahendran Deportation Request Handed Over to Singapore Govt

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு நாடுகடத்துவது தொடர்பில் இலங்கை அரசினால் விடுக்கப்பட்ட கோரிக்கை சிங்கப்பூர் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளியுறவு அமைச்சினால் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு அனுப்பப்பட்ட குறித்த கோரிக்கை, சிங்கப்பூர் அரசிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரியான, ஜனாதிபதி சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற முறி மோசடி தொடர்பில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணைகளின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவராக அர்ஜுன் மகேந்திரன் குறிப்பிடப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...