Friday, March 29, 2024
Home » ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் 754 சிறைக் கைதிகள் நேற்று விடுதலை
சுதந்திர தினத்தையொட்டி

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் 754 சிறைக் கைதிகள் நேற்று விடுதலை

by damith
February 5, 2024 7:20 am 0 comment

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை யொட்டி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் 754 சிறைக்கைதிகள் நாடளாவிய ரீதி யில் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் 29 சிறைச்சாலைகளிலிருந்து மேற்படி கைதிகள் விடுதலையாகி வெளியேறியுள்ளதுடன் அவர்களில் 25 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்த வகையில் 114 சிறைக் கைதிகள் கண்டி பள்ளேகள சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் வாரியபொல சிறைச்சாலையிலிருந்து 73 கைதிகளும் மகர சிறைச்சாலையிலிருந்து 70 கைதிகளும் அனுராதபுர சிறைச்சாலையிலிருந்து 64 கைதிகளும் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT