தெமட்டகொடையில் தீ விபத்து | தினகரன்

தெமட்டகொடையில் தீ விபத்து

தெமட்டகொடை, ஆராமய வீதியை அண்டி அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (17) பகல் 3.00 மணியளவில் இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த அடுக்குமாடியில் 05 ஆவது மாடியிலேயே இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தெமட்டகொடை பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் கொழும்பு நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


Add new comment

Or log in with...