தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியவர் கைது | தினகரன்


தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியவர் கைது

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்திய மீனவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

உடப்பு, முந்தல் ஏரியில் நேற்று (16) மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, குறித்த மீனவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.  

இச்சந்தேகநபரிடமிருந்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை மற்றும் பதிவு செய்யப்படாத படகு ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.  

கைப்பற்றப்பட்டுள்ள உபகரணங்களுடன் குறித்த மீனவர், புத்தளம் மீன்பிடித் திணைக்கள பணிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...