பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம் | தினகரன்


பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த மூவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த ஷாந்த பண்டார, டி.பி.ஹேரத் மற்றும் மனோஜ் சிறிசேன ஆகியோரே பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி முன்னிலையில் இன்று (17) இவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த சாலிந்த திஸாநாயக்கவின் மறைவையொட்டி ஏற்பட்ட வெற்றிடத்திற்கு குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக டி.பி. ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீரவின் மறைவையொட்டி ஏற்பட்ட வெற்றிடத்திற்கு  மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்திருந்த சாந்த பண்டார மீண்டும் அப்பதவியை ஏற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.  


Add new comment

Or log in with...