பாகிஸ்தான் அணித்தலைவராக சர்பராஸ் அஹமட் நீடிப்பு | தினகரன்


பாகிஸ்தான் அணித்தலைவராக சர்பராஸ் அஹமட் நீடிப்பு

பாகிஸ்தான் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக சர்பராஸ் அஹமட் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் மோசமாக விளையாடி வெளியேறியது.

இதனால் அந்த அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக, அணித்தலைவர் சர்பராஸ் அஹமட் மோசமாக விமர்சிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அணியில் சீர்திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்த கிரிக்கெட் சபை, தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தரை அதிரடியாக நீக்கியது.

அவருக்கு பதிலாக அண்மையில் முன்னாள் தலைவர் மிஸ்பா உல் ஹக் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதேபோன்று அணித்தலைவர் சர்பராஸ் அஹமட்டும் நீக்கப்படுவார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், இலங்கை அணியுடனான தொடரில் பாகிஸ்தான் அணியின் தலைவராக சர்பராஸ் அஹமட் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அவர் அணித்தலைவராக நீட்டிக்கப்பட்டுள்ளார். முன்னணி துடுப்பாட்ட வீரராக திகழும் பாபர் ஆசம் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...