கொழும்பு சாஹிரா பழைய மாணவர் கிரிக்கெட் போட்டி | தினகரன்


கொழும்பு சாஹிரா பழைய மாணவர் கிரிக்கெட் போட்டி

கொழும்பு சாஹிரா கல்லூரி 95ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்த பழைய மாணவர்கள் இடையிலான கிரிக்கெட் போட்டி கொழும்பு மூவர்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பதின்மூன்று அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில் கிங்ஸ் 95 அணி இசட்.சீ.எப் 95 அணியை தோற்கடித்தது. வெற்றி பெற்ற அணியின் தலைவர் அர்ஷத் இப்ராஹிம் 90 பழைய மாணவர் குழு தலைவர் மற்றும் கல்லூரி பழைய மாணவர் சங்க சமூக நலத்துறை செயலாளர் எம். ஆர். ஏ. ரசாக்கிடம் வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக்கொண்டார்.

95ஆம் ஆண்டு பழைய மாணவர் குழு தலைவர் நவீஸ் மர்சூக், செயலாளர் ஆஷிக் ஷாபி, பொருளாளர் பயாஸ் முஹ்ஸீன், திட்டத் தலைவர் ஷிஹான் சபார்தீன், திட்ட செயலாளர் முஹம்மத் அப்லால் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ருஸைக் பாரூக்


Add new comment

Or log in with...