2015 - 2018 மோசடி விசாரணை ஆணைக்குழுவில் பிரதமர் வாக்குமூலம் | தினகரன்


2015 - 2018 மோசடி விசாரணை ஆணைக்குழுவில் பிரதமர் வாக்குமூலம்

2015 - 2018 மோசடி விசாரணை ஆணைக்குழுவில் பிரதமர் வாக்குமூலம்-PM Ranil Before PCoI

கடந்த 2015 - 2018 காலப்பகுதியில் அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இன்று (16) குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர், முற்பகல் 9.30 மணியளவில் அங்கு முன்னிலையாகியிருந்தார்.

விவசாய அமைச்சை நடாத்திச் செல்லும் பொருட்டு, ராஜகிரியவிலுள்ள கட்டடம் ஒன்றை பெற்றுக் கொண்ட விடயம் தொடர்பில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடி தொடர்பில் சாட்சியம் வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த விசாரணைகள் மீண்டும் பிற்பகல் 1.15 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், பிரதமருக்கு அங்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்


Add new comment

Or log in with...