Monday, September 16, 2019 - 4:48pm
இன்று பிற்பகல் கலந்துரையாடல்
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இன்றிலிருந்து 14 நாட்களுக்குள் அறிவிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இரத்னபுரியில் இன்று (16) இடம்பெற்ற நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று (16) பிற்பகல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவித்த அவர், இதில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
Add new comment