இராணுவத் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு | தினகரன்

இராணுவத் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இராணுவத் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு-Lieutenant General Shavendra Silva Meets Vice Admiral Piyal De Silva

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவை சந்தித்தார்.

இன்று (16) கடற்படைத் தலைமையகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

கடற்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதியை, கடற்படைத் தளபதி  வரவேற்றார். இராணுவத் தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்ட பின்னர் கடற்படைத் தளபதியுடன் இடம்பெறும் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.

இதன்போது, கடற்படைத் தளபதி, இராணுவத் தளபதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, அதன் பின்னர் பல முக்கிய விடயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

இராணுவத் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு-Lieutenant General Shavendra Silva Meets Vice Admiral Piyal De Silva

இச்சந்திப்பை நினைவுகூரும் வகையில், நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டதோடு, இச்சந்திப்பில் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கடற்படை பணிப்பாளர் நாயகத்தினர் மற்றும் மேற்கு கடற்படை பிரிவுக்கு பொறுப்பான கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

இராணுவத் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு-Lieutenant General Shavendra Silva Meets Vice Admiral Piyal De Silva

இராணுவத் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு-Lieutenant General Shavendra Silva Meets Vice Admiral Piyal De Silva

Add new comment

Or log in with...