உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி மிரட்டிய பெண் பலி | தினகரன்


உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி மிரட்டிய பெண் பலி

தனது கணவரை பயமுறுத்துவதற்காக தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்ட ஒரு பிள்ளையின் தாயார் மரணமடைந்த சம்பவம் கொழும்பு நகர திடீர் மரண விசாரணை மூலம் நீதிமன்றத்தால் தெரியவந்துள்ளது.

இவ்வாறு மரணமடைந்தவர் ஒபேசேகரபுர கிராமோதய மாவத்தையில் வசித்த கங்கொடவிலகே சதுரங்கி கயாசி பெரேரா என்னும் 27 வயதான ஒரு பிள்ளையின் தாயாராவர்.  

தனக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் என்றும் அவர்களுக்கு எட்டு மாத குழந்தையொன்றும் உண்டென்றும் சம்பவதினம் தனக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட சச்சரவு காரணமாக தன்னை பயமுறுத்த மண்ணெண்ணையை உடம்பில் ஊற்றி பற்ற வைத்துக்கொண்டதாகவும். தன்னை பயமுறுத்தவே அவ்வாறு செய்ததாக தனது மனைவி கூறியதாக இறந்தவரின் கணவரான காமினி தினேஷ் குமார (28) மரண விசாரணையின் போது தெரிவித்தார்.  

இறந்தவரின் கணவரை பயமுறுத்துவதற்காக அவ்வாறு மண்ணெண்ணையை உடம்பில் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக தெரிவித்ததாக வெலிகட பொலிஸ் விசாரணை அதிகாரி நவரத்ன (47207) நீதிமன்றில் தெரிவித்தார்.  

கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரி டபிள்யூ.ஏ.சி. லக்மாலி பிரேத பரிசோதனையை நடத்தினார்.  

குறிப்பிட்ட வைத்திய அறிக்கை மற்றும் சாட்சியங்களை கருத்திற்கொண்டு கொழும்பு நகர திடீர் மரண விசாரணையாளர் மொஹமட் அஸ்ரப் ரூமி இறந்தவரின் மரணம் தற்கொலை என முடிவுசெய்தார்.  

வெலிகடை பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.    

ஹேமன்த டெப்   


Add new comment

Or log in with...