பலாலி விமான நிலைய பணிகள் 70% பூர்த்தி | தினகரன்


பலாலி விமான நிலைய பணிகள் 70% பூர்த்தி

அமைச்சர் அர்ஜுன நேற்று திடீர் விஜயம் 

பலாலி விமான நிலையத்தின் பணிகள் 70 வீதம் பூர்த்தியடைந்துள்ளதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நேற்று தெரிவித்தார். 

விமான நிலையத்தின் பணிகளை பார்வையிடுவதற்காக நேற்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அங்கு பொறியியலாளர்களுடன் பேச்சு நடத்தினார்.  

சர்வதேச தரத்தில் பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தும் பணிகளின் முதற்கட்ட பணி தற்போது நடைபெற்று வருகிறது. புதிய ஓடுபாதைகள் சமிக்ஞைகோபுர வேலைகள் என்பன நடைபெற்று வருகின்றன. இதன் முதற்கட்ட பணிகளிலேயே 70 வீதம் பூர்த்தியடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.  

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி பலாலி விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமான சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. எனவே முதற்கட்ட பணிகள் யாவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி பூர்த்தி செய்யப்படும். 

இந்த இலக்கை எட்டும் நோக்குடன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.   இவற்றை நேரடியாக சென்று கண்காணிக்கும் நோக்கிலேயே அமைச்சர் அர்ஜுன இத்திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.   

 


Add new comment

Or log in with...