மழை தொடரும்; மின்னல், காற்று முன்னெச்சரிக்கை | தினகரன்

மழை தொடரும்; மின்னல், காற்று முன்னெச்சரிக்கை

மழை தொடரும்; மின்னல், காற்று முன்னெச்சரிக்கை-Rain Continues-Prevent from Lightning and Heavy Wind

நாட்டில் தற்போது காணப்படும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் எனஎதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய வடக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகவும் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


Add new comment

Or log in with...