தேவாலயம் சென்ற பஸ் விபத்து; மூவர் கலைக்கிடம் | தினகரன்

தேவாலயம் சென்ற பஸ் விபத்து; மூவர் கலைக்கிடம்

புத்தளம், மதுரங்குளி செம்பட்ட பகுதியில் சனிக்கிழமை (14) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் 16பேர் காயமடைந்துள்ளதுடன், அதில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

கம்பஹாவிலிருந்து கற்பிட்டி தலவில தேவாலயத்திற்கு யாத்திரை சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.  

கம்பஹா, வெலிவேரிய, திவுலபிடிய, மினுவாங்கொட, நாத்தாண்டிய மற்றும் வலஹபிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்களே பயணித்துள்ளதாக ௯றப்படுகிறது.   பஸ் சனிக்கிழமை கம்பஹாவிலிருந்து கற்பிட்டி தலவில நோக்கி வந்ததாகவும் மீண்டும் கம்பஹா நோக்கி பயணிக்கும் போதே மதுரங்குளி செம்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  பஸ், மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்டபோது எதிரே வந்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி பஸ் வீதியோரத்தில் கவிழ்ந்ததில் விபத்து இடம்பெற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.  

விபத்தில் காயமடைந்தவர்கள் பிரதேசவாசிகளின் உதவியுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.   சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

(கற்பிட்டி தினகரன் விஷேட, புத்தளம் தினகரன் நிருபர்கள்) 


Add new comment

Or log in with...