தெவரப்பெரும உட்பட ஐவரின் விடுதலையை வலியுறுத்தி மலையகத்தில் ஆர்ப்பாட்டம் | தினகரன்


தெவரப்பெரும உட்பட ஐவரின் விடுதலையை வலியுறுத்தி மலையகத்தில் ஆர்ப்பாட்டம்

தேங்காய் உடைத்து  பூஜை வழிபாடு

களுத்துறையில்​ தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவை மீறி காணி ஒன்றில் பலவந்தமாக புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும மற்றும் ஐவரை விடுதலை செய்யக் கோரி ஹற்றன் என்பீல்ட், நோனாதோட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மலையக தன்னெழுச்சி இளைஞர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (15) நோனாதோட்டத்தில் ஸ்ரீ செல்வவிநாயக ஆலயத்திற்கு முன்பாக பதாகைகளை ஏந்தியவண்ணம் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்மையாக சேவை செய்யும் தலைவர்களை இனங்காண்போம், ஏமாற்று தலைவர்களை வெளியேற்றுவோம், பாலித்த விடுதலைக்கு இறை ஆசி வேண்டி பூஜை செய்வோம் போன்ற பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டகாரர்கள் கோஷமெழுப்பினர்.

இந்த ஆர்பாட்டத்தின் போது 75ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு செல்வ விநாயகர் ஆலயத்தில் தேங்காய்கள் உடைத்து விசேட பூஜைகளிலும் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்கது.

 

 

ஹற்றன் சுழற்சி, ​ நோட்டன் பிரிட்ஜ் நிருபர்கள்


Add new comment

Or log in with...