ஹம்பாந்தோட்டை இக்ராவில் இருமாடிக் கட்டடம் திறப்பு | தினகரன்


ஹம்பாந்தோட்டை இக்ராவில் இருமாடிக் கட்டடம் திறப்பு

பிரதம அதிதியாக அமைச்சர் சஜித்

கல்வி அமைச்சின் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை இக்ரா ஆரம்ப வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டுமாடிகளைக் கொண்டஆரம்ப கற்றல் வளநிலையம் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் இன்று (16) மாணவர்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

இக் கட்டட நிர்மாணத்திற்கென கல்வி அமைச்சு மேற்படி திட்டத்தின் கீழ் 226.5 இலட்சம் ரூபாயினை செலவளித்துள்ளது. வகுப்பறைகளோடு சகல வசதிகளையும் கொண்ட வாசிப்பு அறை, செயற்பாட்டுஅறை என்பனவும் இதில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் பிரதேச அரசியல் தலைவர்களுடன், கல்வி அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள்,பாடசாலை அபிவிருத்திநிர்வாகக் குழுவினர்.

பாடசலை பழைய மாணவர்கள், மாணவர்களுடன் பெற்றோர்களும் கலந்துகொள்ளவுள்ளதோடு மாணவர்களின் கலை கலாசார அம்சங்களும் இடம்பெறவுள்ளதாக பாடசாலை அபிவிருத்தி நிர்வாகக் குழுவின் செயலாளர் எம். ஏ. எம். அஸாத் ​ெதரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை குறுாப் நிருபர்


Add new comment

Or log in with...