ஐ.தே.முவின் ஜனாதிபதி வேட்பாளர்; பத்து நாட்களுக்குள் அறிவிக்கப்படும் | தினகரன்


ஐ.தே.முவின் ஜனாதிபதி வேட்பாளர்; பத்து நாட்களுக்குள் அறிவிக்கப்படும்

ஐ.தே.முவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னும் பத்து நாட்களுக்குள் நாட்டு மக்களுக்கு சந்தோச செய்தியொன்று கிடைக்கவிருப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்

கண்டியில் நேற்று (15)

பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அமைச்சர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்துரையாற்றிய அமைச்சர் எங்களது கலந்துரையாடல் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

ஐ.தே.க யாப்பில் அபேட்சகரை தெரிவு செய்யும் உரிமை செயற் குழுவுக்கே உள்ளது. ஐ.தே.கவில் அபேட்சகர்கள் அதிகமுள்ளனர். செயற்குழுவே அபேட்சகரைத் தெரிவு செய்யும்,இதில் மூவின மக்களும் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் பொறுமையாக இருக்கவும்.பிரச்சினை தீர்ந்து விடும். சரியான நேரத்தில் கொண்டு வருவோம். எதிர்க் கட்சி வேட்பாளர் தொடர்பில் நாங்கள் அவசரப்படத் தேவையில்லை. முன்னரே தன்னை அடயாளப்படுத்தியவர்கள் செல்வதற்கு இடமில்லாமல் உள்ளனர். இவர்களை சுற்றி வந்தவர்கள் கடைசியில் வீட்டுக்கே போனார்கள். அபேட்சகரின் பெயர் குறிப்பிடப்பட்டதன் பின்னரே களம் சூடுபிடிக்கும்.வெற்றி கொள்ளக் கூடிய ஒரு வரையே நாம் இறக்குவோம்.

 

எம்.ஏ.அமீனுல்லா


Add new comment

Or log in with...