மலையக மக்களின் இஷ்டதெய்வம் மாரியம்மன் | தினகரன்


மலையக மக்களின் இஷ்டதெய்வம் மாரியம்மன்

மேல் மாகாணம் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாலிந்தநுவர பிரதேச  பதுரலிய டெல்கீத் தோட்டத்தில் சுமார் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். சமய சமூக கலாசாரத்திலும் மிகவும் ஈடுபாட்டுடன் வாழ்ந்த நிலையில் மலையக மக்களின் இஷ்ட தெய்வ வழிபாடாகிய, பாரம்பரிய தெய்வங்களில், அம்மா தாயே, ஆத்தா, மகாமாயி, எங்க முத்துமாரியம்மா என்று பக்தியோடும், அன்போடும் வழிபடும் தெய்வமாகிய ஸ்ரீமுத்துமாரியம்மன் தெய்வத்தை தெய்வ வடிவில்  கல்லை  வழிபட்டு வந்தார்கள். சுமார் 150 வருடங்களுக்கு முன்பு அக்கால மக்களின் வசதிக்கும் வாழ்வதாரத்துக்கும் ஏற்ற போல் ஒரு மடாலயத்தை கட்டி வழிபட்டு வந்தார்கள்.  

கல்வி, சமயம், பொருளாதாரம், விஞ்ஞானத்தின் வளர்ச்சி, கலை கலாசாரம், கட்டிடங்களின் தோற்றம் ஆகியன புத்துயிர் பெற்று வரும் தறுவாயில் இப்பகுதி வாழ் மக்களிடையேயும் பிள்ளைகளிடையேயும் அறிவுபூர்வமான புத்தி சதுாரியங்களில்  முன்னேற்றம் ஏற்பட்டது. அந்த வகையில் முன்பு இருந்து பழமைவாய்ந்த மடாலயத்தை அகற்றி நிலத்தை தரசு நிலாமாக்கி 2006.12.01ம் திகதி கொழும்பு இராமகிருஷ்ணமிசன் தலைவர் சுவாமி ஆத்மானந்தஜி  தலைமையில் சகல ஆகம நியதியோடும் புதிய தோற்றத்துடன் ஆலயம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.  

அந்த வகையில் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மகிந்த சமரசிங்கவின் பிரதிநிதித்துவத்தின் பேரில் ஜனாதிபதியின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியுதவியும் இதற்கு கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.  

இவ்வாலயம் ஓரிரு நிர்மணப்பணிகளில் குறைகள் இருப்பினும் சுமார் ஒரு வருட கால எல்லையில் மிகவும் அழகாக ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டு 2008.03.21ம் திகதி பங்குனி உத்திரத்தில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.  

இங்கு மூலவர் ஸ்ரீமுத்துமாரியம்மன், விநாயகர், முருகன் , சரஸ்வதி,- லட்சுமி, இராமர்- சீதை, காளியம்மன்-, துர்க்கை, வசந்த மண்டபம், நவக்கிரகம், வைரவர், நாகபிரான் ஆகிய பரிவார சந்நிதானங்களோடு பக்திபூர்வமாக அருள்பாலிக்கின்றாள்.  

இவ்வாலயத்தின் வருடாந்த திருவிழா, விஷேட பூஜைகள் என்பன இடம்பெறுகின்றன. மேலும் குறிப்பிட்ட கால எல்லையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அடியார்களின் முழு முயற்சியோடு அழகான ஓர் சித்திர தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாலயத்தின நிர்மாணப் பணிகளில் சில குறைபாடுகளுடன் இராஜகோபுரம், மணிகோபுரம், கொடி ஸ்தம்பம், தேர்முட்டி, நீர் வசதியின்மை, அறநெறி மண்டபம், ஆலயத்தின் பிரதான பாதை செப்பனிடுதல் போன்ற குறைபாடுகளும் இருக்கின்றன.  

2020ம் ஆண்டு 12 ஆண்டுகால கும்பாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு, பங்குனி உத்தரத்தில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு எஞ்சியுள்ள நிர்மாண பணிகளின் குறைபாடுகளையும் புனர்நிர்மாணம் செய்து அடுத்துவரும் காலங்களில் அம்பாளின் ஆசியுடன்  தனவந்தர்கள், அரசியல் பிரமுகர்களின் ஒத்துழைப்போடு திருப்பணி நிறைவு செய்து 2021ம் ஆண்டு சுப தினத்தில் ஜிர்ணோத்தாரன கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற எல்லாம்வல்ல அம்பிகையின் அருட்கடாட்ஷத்தை எண்ணி வேண்டுகின்றோம் என்று இறைபணியோடு இப்பகுதி வாழ் பொது மக்கள் ஆலய பரிபாலன சபையினர் வேண்டுகின்றனர்.

இவ்வாலயத்தின் பொதுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்  ஆலய வளர்ச்சியை பற்றியும் 12 வருட நிறைவு  கும்பாபிஷேக பூர்த்தியுடன் அடுத்து நடைபெற இருக்கும் ஜிர்னோத்தாரண  கும்பாபிஷேகத்தைப் பற்றியும்  பேசப்பட்டது. மேலும் இதனைத்  தொடர்ந்து பொதுமக்களின் ஏகோபித்த முடிவுடன் புதிய பரிபாலன சபை ஒன்று தெரிவு  செய்யப்பட்டது.

தலைவர்:  கே. சந்திரகுமார், செயலாளர் சிங்காரவேல்,  பொருளாளர்:  கே. மயில்வாகனம், உப தலைவர்: ஜீ. ஜெயபாலன், உப  செயலாளர்: டி. விஷ்வசாத், உப பொருளாளர்  எஸ். ஆறுமுகம்.   எம். சிவசெல்வம், கே. மோகன்ராஜ், எஸ். அருள் செல்வம், எஸ். பாலசுப்பிரமணியம், ஆர். இராஜேஸ்குமார், கே. விஷ்வநாத், எஸ். நவரட்னம் ஆகியோர் பரிபாலனசபை உறுப்பினர்களாகவும்  ஜி. ஜெயமூர்த்தி,  எஸ். அருள்ராஜ்,  எஸ். ஞானராஜ் ஆகியோர்    அறங்காவலர் சபை உறுப்பினர்களாகவும்  எஸ். சண்முகநாதன்,  ஏ. குகனேந்திரன்,  ஆர். விஜயகுமாரன்,  ஜி. என்டனி ஆகியோர்    ஆலோசகர்களாகவும்  தெரிவு செய்யப்பட்டார்கள்.       


Add new comment

Or log in with...