இந்தியாவின் ஒரே மொழி இந்தி; அமித் ஷாவுக்கு தலைவர்கள் எதிர்ப்பு | தினகரன்

இந்தியாவின் ஒரே மொழி இந்தி; அமித் ஷாவுக்கு தலைவர்கள் எதிர்ப்பு

 இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்தி மொழி தினத்தையொட்டி மத்திய உள்துறை மந்திரியும், பாரதிய ஜனதா தேசிய தலைவருமான அமித்ஷா வாழ்த்து செய்தி வெளியிட்டு இருந்தார்.

அதில், இந்தி நாட்டின் தேசிய மொழியாக இருக்க வேண்டும். இந்தியால் தான் நாட்டை ஒருங்கிணைக்க முடியும். இந்தியை வைத்துதான் வெளிநாடுகளில் இந்தியாவை அடையாளம் காண முடியும் என்று கூறி இருந்தார்.

அவருடைய கருத்துக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திராவிடக்கழக தலைவர் கி.வீரமணி மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...