வெள்ளத்தால் ராஜஸ்தான் மாணவர்கள் விடிய விடிய பாடசாலைக்குள் தவிப்பு | தினகரன்

வெள்ளத்தால் ராஜஸ்தான் மாணவர்கள் விடிய விடிய பாடசாலைக்குள் தவிப்பு

 ராஜஸ்தான் மாநிலம், சிட்டோகர் மாவட்டத்தில் அணைக்கட்டில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் நீர் சாலை வழியாக பெருவெள்ளமாக பாய்ந்தோடியது. இதனால் 350 மாணவர்கள் விடியவிடிய பாடசாலைக்குள் சிக்கித் தவித்தனர். இவர்கள் இரவு முழுவதும் பாடசாலைக்குள் தவித்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பல மாவட்டங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அவ்வகையில், சிட்டோகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த பெருமழையின் விளைவாக ஏரிகள், அணைக்கட்டுகள் ஆகியவற்றில் கொள்ளளவை கடந்து தண்ணீர் வெள்ளமாக கரைபுரண்டு ஓடியது.

இந்நிலையில், இம்மாவட்டத்தில் உள்ள ராணா பிரதாப் அணையில் இருந்து மழைநீர் நேற்று முன்தினம் திறந்து விடப்பட்டது. அந்த நீர் முக்கிய சாலைகள் வழியாக பெருவெள்ளமாக பாய்ந்தோடியதால் அருகாமையில் உள்ள அரசு பாடசாலையில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என சுமார் 400 பேர் சாலையை கடந்து வீட்டுக்கு செல்ல முடியாமல் விடியவிடிய பள்ளிக்குள் சிக்கித் தவித்தனர்.

அவர்கள் அனைவருக்கும் அந்த பாடசாலை அமைந்திருக்கும் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்து உணவு வகைகளை சமைத்து பரிமாறினர்.


Add new comment

Or log in with...