'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணி இன்று | தினகரன்


'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணி இன்று

யாழ்ப்பாணத்தில் இன்று 16 நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு ஈழத்தமிழர் சுயாட்சி கழகமும் தனது ஆதரவை வழங்குவதுடன் பேரணியை வலுவூட்டுமுகமாக மக்களின் முழு ஆதரவையும் பூரண ஒத்துழைப்பையும் நல்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

தமிழ் மக்கள் பேரவையின் ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் ஈழத்தமிழர் சுயாட்சி கழகமும் தனது ஆதரவை வழங்குவதாக கட்சியின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்  

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை மாநாடு ஜெனிவாவில் ஆரம்பித்துள்ள இந்த நேரத்தில், தங்களுக்கான நீதியை பெற்றுத்தருவதில் சர்வதேசத்திற்கும் பாரிய பங்குள்ளது என்பதினை சர்வதேசத்துக்கு எடுத்துரைக்கும் வகையில் தமிழ் மக்களின் முக்கிய கோஷங்களை முன்வைத்து யாழ் மண்ணில் இன்று திங்கட்கிழமை ‘எழுக தமிழ்;’ எழுச்சிப் பேரணியினை தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. தமிழ் மக்கள் பேரவை வடக்கு, கிழக்கு தழுவியதாக தமிழர் தாயகமெங்கும் எழுக தமிழுக்கான ஆதரவு பல்வேறு தளங்களில் இருந்தும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  

இந் நிலையில் ஈழத்தமிழர் சுயாட்சி கழகமும் வடக்கு கிழக்கு மக்களிடம் எழுக தமிழுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது 

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்  


Add new comment

Or log in with...