சிவகுருநாதன் ஞாபகார்த்த கிண்ணம்; ஆனந்தாவை வீழ்த்தியது யாழ். இந்து (VIDEO) | தினகரன்


சிவகுருநாதன் ஞாபகார்த்த கிண்ணம்; ஆனந்தாவை வீழ்த்தியது யாழ். இந்து (VIDEO)

கொழும்பு ஆனந்தாவை வீழ்த்தியது யாழ். இந்துக்கல்லூரி

யாழ் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரிகளுக்கிடையிலான  சிவகுருநாதன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2019  கிரிக்கெட் போட்டியில், கொழும்பு ஆனந்தா கல்லூரி அணியை 4  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி யாழ். இந்துக்கல்லூரி அணி வெற்றி பெற்றது.

புனித ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று (14) இடம்பெற்றது. 8 ஆவது தடவையாக இடம்பெறும் இத்தொடரில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆனந்தாக்கல்லூரி அணி துடுப்பெடுத்தாட க் களமிறங்கியது.

சிவகுருநாதன் கிண்ணம்; ஆனந்தாவை வீழ்த்தியது யாழ். இந்துக் கல்லூரி-Sivagurunathan Remembrance Cup-Jaffna Hindu Won Colombo Ananda

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சத்மிர 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஆனந்தாக் கல்லூரி அணி  20 ஓவர்களில், 5 விக்கெட்டுகளை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் யாழ். இந்துக் கல்லூரி சார்பில் பிரியந்தன் இரண்டு விக்கெட் டுகளை கைப்பற்றினார்.

வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய யாழ். இந்துக்கல்லூரி அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களை பெற்று 4 விக்கெடுக்களால் வெற்றிபெற்றது.

துடுப்பாட்டத்தில் யோகீசன் 16 ஓட்டங்களையும், கஜனந், கோமைந்தன் தலா 14 ஓட்டங்களை யும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் ஆனந்தாக்கல்லூரி அணி சார்பில் திசிக இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஆட்டநாயகன் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீர்ராக கொழும்பு ஆனந்தாக்கல்லூரி அணி வீரர் சத்மிர தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் சிறந்த பந்து வீச்சாளராக ஆனந்தாக் கல்லூரி வீர்ராக திசிகவும், சிறந்த களத்தடுப்பாளராக யாழ். இந்துக் கல்லூரி அணி வீரர் தனுஸ்ரனும், சகல துறை வீர்ராக இந்துக்கல்லூரி வீரர் கோமைந்தனும் தெரிவு செய்யப்பட்டனர்.

சிவகுருநாதன் கிண்ணம்; ஆனந்தாவை வீழ்த்தியது யாழ். இந்துக் கல்லூரி-Sivagurunathan Remembrance Cup-Jaffna Hindu Won Colombo Ananda

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக வடமாகாண  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், சிவில் விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியேயார் கலந்துகொண்டனர்.

(நல்லூர் விசேட நிருபர் - ப. அஹிந்தன்)


Add new comment

Or log in with...