பொரலஸ்கமுவவுக்கு இடம் மாறியுள்ள நீற் ஒப்டிக்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் | தினகரன்


பொரலஸ்கமுவவுக்கு இடம் மாறியுள்ள நீற் ஒப்டிக்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்

கண் பராமரிப்பு மற்றும் கண் பரிசோதனை உற்பத்திக் கருவிகளின் இறக்குமதியாளரும், விநியோகத்தருமான நீற் ஒப்டிக்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனம், தனது காட்சியறையை இல. 347/1லேக் றோட், பொரலஸ்கமுவ என்ற முகவரியிலுள்ள தனது சொந்த வளாகத்திற்கு இடம் மாற்றியுள்ளது. இலங்கையின் முன்னணி கண் பராமரிப்பு சில்லறை விற்பனையாளர்களை உள்ளடக்கிய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மற்றும் வசதியான சேவைகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த மாற்றம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 

 பிரசித்திபெற்ற கண் பராமரிப்புத் தீர்வு வழங்குநர்களில் ஒருவரான நீற் ஒப்டிக்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனம், கண் பார்வை சம்பந்தமாக நாட்டில் பரந்தளவில் B2B சேவைகளை மேற்கொண்டு வருகிறது. கவர்ச்சிகரமான பிரேம்கள், சன் கிளாஸ்கள், சாதாரண மூக்குக் கண்ணாடிகள், கண் வில்லைகள், இயந்திரத் தொகுதிகள் உட்பட தேவையான பொருட்களை சீனா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து தருவித்து விநியோகித்து வருகின்றது. நிறுவனத்தின் தயாரிப்புக்களான 2ஸ்டார், ஐ மெக்ஸ், கிரவுன் மற்றும் கிறிஸ்டல் பிரேம்கள், ரெட் சன்கிளாஸ்கள் உட்பட சுபோர் மற்றும் ஜின்யுவான் பிரான்டட் இயந்திரங்கள் இவற்றில் அடங்கும். 

இந்த நிறுவனம் சமந்த பத்திரணவால் 2004ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் மூலம், கண் பராமரிப்புத் துறையில் நிலவி வந்த வெற்றிடத்தை அவரால் பூர்த்தி செய்ய முடிந்துள்ளது. இதுபற்றி அவர் கருத்து வெளியிடுகையில், சில்லறை வர்த்தகர்களுக்கு உற்பத்தி மற்றும் புலன் சம்பந்தமான துறையில் முறையான சேவைகள் கிடைக்கவில்லை. இந்த இடைவெளிகளைக் குறைக்கும் நோக்கத்துடன் நீற் ஹோல்டின்ஸ் நிறுவனத்தை நான் ஆரம்பித்தேன். கண் பராமரிப்பு சம்பந்தமாக சில்லறை விற்பனையாளர்கள் தரமான தயாரிப்புகளை தொடர்ந்து வழங்குவார்கள்.

பார்வை அளவையியல் தீர்வுகளில் தேவையைக்காணும் வரை நான் பல்வேறு தயாரிப்புக்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தேன்.

அப்போது சந்தைவாய்ப்பு இந்த வர்த்தகத்திற்கு சாதகமாக அமைந்திருந்தன. விற்பனைக்குப் பிந்திய சேவைகளையும் நாம் பல வருடங்காக வழங்கி வந்தனால், நம்பிக்கையான வாடிக்கையாளர் கட்டமைப்பை எம்மால் உருவாக்க முடிந்துள்ளது. இது தொழிற்துறையின் 90% ஆன தேவைகளை உள்ளடக்குகிறது’ என்று கூறினார்.   


Add new comment

Or log in with...