PickMe இன் விந்துலவுக்கு MIT இல் புலமைப்பரிசில் | தினகரன்

PickMe இன் விந்துலவுக்கு MIT இல் புலமைப்பரிசில்

PickMe இன் ஆராய்ச்சிப் பிரிவு உறுப்பினரான மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பட்டதாரி விந்துல ஜயவர்த்தன Massachusetts Institute of Technology (MIT) இல் தனது PhD கல்வியைத் தொடர்வதற்கான புலமைப்பரிசிலைப் பெற்றுள்ளார்.

போக்குவரத்து தொடர்பான இயற்கைச்சூழல் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் இவர், தேவைக்கேற்ப நகர்கையை அதிகரிப்பதற்கான புதிய நெறிமுறை தொடர்பில் ஆராய்ந்து வருகிறார். விந்துலவின் ஆராய்ச்சி PickMe இன் தளத்துக்கு உதவியாக அமைந்துள்ளது.

புலமைப்பரிசில் திட்டத்துக்கு தெரிவு செய்யப்படுமுன் விந்துல, கோர்னெல் பல்கலைக்கழகத்தில் நகர்கை தேர்வுமுறை தொடர்பில் ஆய்வுத் திட்டமொன்றில் பணியாற்றினார். இதற்கான முழு நிதியுதவியையும் PickMe வழங்கியிருந்தது.  

சிறுவயதிலிருந்தே MIT இற்கு செல்லவேண்டும் எனக் கனவு காண்பேன். எனது பட்டக்கல்வியை முடித்ததும் உடனடியாகவே முதுமானிப் பட்டத்தை ஆரம்பித்தேன்.

PickMe சார்பாக கோர்னெல் பல்கலைக்கழகத்தில் நான் முன்னெடுத்த ஆய்வுத் திட்டமே நான் MIT செல்வதற்கு உதவியாக இருந்ததாகவும் தனது கனவை நனவாக்குவதற்கு உதவியாகவிருந்த PickMe இற்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக விந்துல குறிப்பிட்டார்.  

விந்துலவைப் பார்த்து நாம் மிக்கமகிழ்ச்சியடைகின்றோம்.

இளைமையான, திறமைமிக்க ஆய்வாளர், தொழில்நுட்பத்துடன் ஆர்வமுள்ள ஒருவர் எமது நாட்டிலிருந்து MIT இற்குச் செல்வது பெருமையளிக்கிறது. போக்குவரத்து நகர்கை தொடர்பான எமது ஆராய்ச்சிகள் இவரைப்போன்ற இளைஞர்களுக்கு இலக்கு வைத்ததாக அமைந்துள்ளது.

PickMe இல் உள்ள அனைவரின் சார்பாகவும் விந்துலவின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக PickMe இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜஃப்ரிசுல்ஃபர் தெரிவித்தார்.  


Add new comment

Or log in with...