சிறுமியின் பெயரை விற்று பணம் பறித்த 2 இளைஞர்கள் கைது | தினகரன்


சிறுமியின் பெயரை விற்று பணம் பறித்த 2 இளைஞர்கள் கைது

சிறுமியின் பெயரை விற்று பணம் பறித்த 2 இளைஞர்கள் கைது-Fake Tickets 2 Youth Arrested-Balangoda

சிறுமியொருவர் நோய் வாய்ப்பட்டுள்ளதாக பொய் கூறி ஏமாற்றி, போலி டிக்கெட்டுகளை விற்று பொதுமக்களி டம் பணம் பறித்த 2 இளைஞர்களை பலாங்கொடை பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.

சிறுமியின் பெயரை பெயரிட்டும்  டிக் கட்டுகளை பல பெறுமதிகளில் அச்சி ட்டும் வங்கிக்கணக்கொன்றின் இலக்கத்தைக் குறிப்பிட்டும் அக்கணக்கி ல் விரும்பியோர் பணத்தை வைப்புச்  செய்யுமாறு இந்த டிக்கெட்டுகள் மூல ம் கேட்கப்பட்டுள்ளன.

பலாங்கொடை நகரில் நடமாடும் மேற்படி போலி ஆசாமிகள் பொ து மக்களிடம் பலாத்காரமாகவும் அழுத்தம் கொடுத்தும் சிறுமியின் பெயரி ல் பணம் பறிக்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேகநபர்கள் இருவரும் கைது செ ய்யப்பட்டனர்.

குறித்த போலி டிக்கெட்டுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர் - பாயிஸ்)


Add new comment

Or log in with...