தெமட்டகொடை பகுதியில் வெடிப்பு; இரு பெண்கள் காயம் | தினகரன்


தெமட்டகொடை பகுதியில் வெடிப்பு; இரு பெண்கள் காயம்

தெமட்டகொடை பகுதியில் வெடிப்பு;  இரு பெண்கள் காயம்-Deamtagoda Mahawila Blast-2 Women Injured
(வைப்பகப் படம்)

தெமட்டகொடை பிரதேசத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர்.

தெமட்டகொடை, மஹவில ஒழுங்கை, சமந்தவத்தை பிரதேசத்திலுள்ள் வீடொன்றிலேயே குறித்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த இரு பெண்களும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சமையல் எரிவாயு கொள்கலன் வெடித்ததன் காரணமாக குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...