சிறந்த லீசிங் வசதிக்காக இந்திரா டிரேடர்ஸ் உடன் கைகோர்க்கும் செலான் | தினகரன்


சிறந்த லீசிங் வசதிக்காக இந்திரா டிரேடர்ஸ் உடன் கைகோர்க்கும் செலான்

இரண்டு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக, இலங்கையின் நம்பிக்கையை வென்ற நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழும் செலான் வங்கி, இந்திரா டிரேடர்ஸ் உடன் கைகோர்த்து, ஒப்பற்ற லீசிங் அனுகூலங்களை பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது.  

விசேட வட்டி வீதத்தில், இலவச வாகன பதிவு, விலைக்கழிவுகளுடனான காப்புறுதி தவணைக் கட்டணங்கள் ஆகியவற்றை இந்த பங்காண்மையினூடாக நுகர்வோருக்கு பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் இலவச ஆயுள் காப்புறுதி மற்றும் இலவச வாகன உதிரிப்பாகங்கள் போன்றவற்றையும் பெற்றுக் கொள்ளலாம்.

மேலே தெரிவிக்கப்பட்ட அனுகூலங்களுக்கு மேலாக, இந்திரா டிரேடர்ஸினால், செலான் வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விசேட விலைக்கழிவுகளும் வழங்கப்படுகின்றன.  

அன்புடன் அரவணைக்கும் வங்கியான செலான் வங்கி, இந்த கைகோர்ப்பினூடாக, வாடிக்கையாளர்களுக்கு தமது கனவு வாகனத்தை சிக்கல்களற்ற வகையில் பெற்றுக் கொள்வதற்கு உதவியாக அமைந்துள்ளது. 

 


Add new comment

Or log in with...