ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சுகாதார, பாதுகாப்பு சான்றிதழ் | தினகரன்


ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சுகாதார, பாதுகாப்பு சான்றிதழ்

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட தரநிலைப்படுத்துதலுக்கான சர்வதேச அமைப்பு, ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுககத்துக்கு அதன் தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு முகாமைத்துவத்துக்காக ISO 45001: 2018சான்றிதழை வழங்கியுள்ளது.

சான்றிதழைப் பெறுவதற்கு முன்னர் துறைமுகம் 6மாதகால தயாரிப்பு மற்றும் 3மாதகால கணக்காய்வுச் செயன்முறைகளுக்கு உட்பட்டது. இது நிறுவனங்களுக்கு ஒரு சிறந்த தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு (OH&S) முகாமைத்துவ முறையை அமுல்படுத்த உதவுகிறது. தரம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் சமூக பொறுப்புணர்வு ஆகிய துறைகளில் கணக்காய்வுச் செயற்பாடுகளில் உலகளாவிய பெயர்பெற்ற Bureau Veritas Lanka (Pvt) Ltd கணக்காய்வுப் பணிகளை மேற்கொண்டது.

தரநிலையைப் பயன்படுத்துவதனால் பணியிட அசம்பாவிதங்களைக் குறைத்தல், வருகை தவிர்ப்பு மற்றும் ஊழியர்களின் வருவாய் பிரச்சினைகள் என்பனவற்றைக் குறைத்தல், உற்பத்தித்திறன் அதிகரிப்பதற்கு வழிவகுத்தல், சுகாதார மற்றும் பாதுகாப்பு கலாசாரத்தை உருவாக்குதல் என்பனவற்றில் ஊழியர்கள் பங்கேற்க இதன் மூலம் ஊக்குவிக்கப்படுகிறார்கள். 

”ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் உலகத்தரம் வாய்ந்த இழப்பு குறைப்பு முறைகளைக் கொண்டுள்ளது, இது மக்கள், சுற்றுச்சூழல், சொத்துக்கள் மற்றும் எங்கள் அனைத்து பங்குதாரர்களின் நற்பெயரையும் பாதுகாக்கிறது. ISO 45001 உடன், நாங்கள் எங்கள் வணிக செயல்முறைகளுக்கு கூடுதல் மதிப்பைச் சேர்த்து, முறைமைகளை மேம்படுத்தியுள்ளோம் ”என்று ஹம்பாந்தோட்டை துறைமுக தலைமை நிர்வாக அதிகாரி ரே ரென் கூறுகிறார். ”இது எமக்கு ஒரு முக்கியமான மைல்கல்லாகும், ஏனெனில் இது எங்கள் பங்காளர்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை தெளிவாக விளக்கும். இது மனிதன், இயந்திரம் மற்றும் அமைப்புகளை உள்ளடக்கிய எண்ணற்ற பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் கையாள்வதற்கு அவசியமானது.”என்கிறார் HIPG பிரதம செயற்பாட்டு அதிகாரி திஸ்ஸ விக்ரமசிங்க.    


Add new comment

Or log in with...