இலங்கையில் புதிய A 2020 தொடரை வெளியிடும் OPPO | தினகரன்


இலங்கையில் புதிய A 2020 தொடரை வெளியிடும் OPPO

இலங்கையில் புதிய A 2020 தொடரை வெளியிடும் OPPO-OPPO New A Series Launch

OPPO தனது இலங்கை சந்தைக்கான வர்த்தகக் குறியீட்டை (Brand) மேலும் வெற்றிகரமாக மேற்கொள்ளும் வகையில் A9 2020 மற்றும் A5 2020 உள்ளிட்ட A 2020 தொடரை (​​OPPO A Series 2020) செப்டெம்பர் 17 ஆம் திகதி கொழும்பில் அறிமுகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பபை வெளியிடும் முயற்சியை OPPO மிக மும்முரமாக மேற்கொண்டுள்ளது. OPPO நடுத்தர வகை ஸ்மார்ட்போன்கள் தொடர்பில் அண்மைக் காலமாக அதிரடி வசதிகளை, குறிப்பாக புகைப்படம் எடுத்தல், அழகிய வடிவமைப்பு மற்றும் நீண்ட நாள் மின்கல பாவனை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அவற்றில் வழங்கி வருகின்றது. குறித்த புதிய OPPO A 2020 தொடரானது பல்தரப்பட்ட பயனர்களுக்கும், குறிப்பாக தலைமுறை Z இளைஞர்களுக்கு ஒரு தனித்துவத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புதிய A 2020 தொடரை வெளியிடும் OPPO-OPPO New A Series Launch

இது வரையான A தொடரின் கதை
OPPO கடந்த பத்து ஆண்டுகளாக வெளிநாட்டு சந்தைகளில் மிக செயற்றிறனுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் OPPO A தொடரானது நமது உலகளாவிய பயனர்களால் மிகவும் விரும்பப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில் தாய்லாந்து சந்தையில் முதலாவது OPPO A தொடர் தொலைபேசியான A100 அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இத் தொடரின் வடிவமைப்பு, புகைப்படம் எடுத்தல் மற்றும் மின்கல தொழில்நுட்பம் சிறப்பம்சங்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் அனைவரதும் புகழை பெற்றது.

கடந்த 10 ஆண்டுகளில், பல இளைஞர்கள் தங்கள் முதல் ஸ்மார்ட்போனாக OPPO A தொடரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஒரு ஸ்மார்ட்போனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் அவர்கள் கற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாது, புகைப்படம் எடுத்தல் மற்றும் செயலிகள் போன்றவை தொடர்பில் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்வில் பெறக்கூடிய அனைத்து எல்லையற்ற விடயங்களையும் அடைவதற்கான புதிய வழிகளை A சீரிஸ் வழங்கியுள்ளது. ஸ்மார்ட்போன்கள் பிரத்தியேக உதவியாளர்களைப் போல மாறிய நிலையில், சமீபத்திய மொபைல் போக்குகளுடன் போட்டியிட்டு OPPO  தொடர்ந்தும் மொபைல் சந்தையில் போட்டிமிக்கதாக அமைந்து வருகின்றது. இளைஞர்களிடையே குறுகிய வீடியோ தொடர்பான பயன்பாடுகளின் சமீபத்திய அதிகரிப்பு போன்றவை தொடர்பான தொழில்நுட்பங்களிலும் அது தனது சாதனங்களில் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கையில் புதிய A 2020 தொடரை வெளியிடும் OPPO-OPPO New A Series Launch

A 2020 தொடர் - தலைமுறை Z இனரின் தேவைகளை ஈடு செய்கிறது
இளைஞர்கள், குறிப்பாக வாழ்க்கையில் தமது பாதையை தேர்ந்தெடுக்க விரும்புவோர், பெரும்பாலும் அவர்கள் தமக்குள்ளேயே ஒரு சிலவற்றை புதைத்து விட நினைக்கிறார்கள். தற்போது, ​​OPPO A Series 2020 முன்னரை விட சாத்தியப்படுத்தும் பல்வேறு விடயங்களை வழங்குகிறது. குறிப்பாக அதன் புதிதாக மேம்படுத்தப்பட்ட 48MP அல்ட்ரா வைட் (மிக அகன்ற காட்சியைக் கொண்ட) குவாட் கெமரா, இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 5,000mAh அல்ட்ரா பெட்டரி (சக்தி வாய்ந்த மின்கலம்) ஆகியவற்றின் மூலம் பயனர்களுக்கு அவ்வசதிகளின் தேவையேற்படும்போது  அவர்கள் தமக்குள் சமரசம் செய்ய வேண்டிய அவசியத்திலிருந்து அவர்களை விடுவிக்கிறது.

48MP அல்ட்ரா-வைட் கோண (Ultra-Wide-Angle) குவாட் கெமரா அமைப்பு அனைத்து படப்பிடிப்பு கோணங்களுக்கும் மற்றும் அனைத்து காட்சிகளுக்கும் உகந்த வகையில் பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது. இது அல்ட்ரா நைட் செயற்பாடு 2.0 (Ultra Night Mode 2.0), அல்ட்ரா-வைட் (Ultra-Wide) புகைப்படம் மற்றும் முழு அளவிலான கலையியல் உருவப்பட பாணிகளுக்கு இசைவுடையதாக அமைந்துள்ளது. இதேவேளை, முற்புற 16MP கெமரா ஆனது AI (செயற்கை நுண்ணறிவு) அழகுபடுத்தும் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டு, பிரத்தியேகமான அழகுபடுத்தப்பட்ட செல்ஃபிக்களை வழங்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் இது பயனர்கள் சமீபத்திய போக்குகளுக்கு ஏற்ப தங்கள் தோற்றத்தை அழகாக பெறுவதற்கு வசதியழிக்கிறது.

4K வீடியோ தொழில்நுட்பம் காரணமாக முன்னரை விட வீடியோ படப்பிடிப்பு சிறந்ததாக அமைகிறது. இதனால் ஒட்டுமொத்த வீடியோ விளைவுகள் சிறப்பாக அமைய வழிவகுப்பதோடு, மேலும் தெளிவான வண்ணங்கள் மற்றும் குறைந்த தாமதத்துடன், நிலையான, தொழில்முறை வீடியோக்களை உறுதிப்படுத்தும் அதிர்வற்ற ஸ்திரத்தன்மையைக் கொண்ட தொழில்நுட்பத்தை கொண்ட தெளிவான வீடியோக்களை உருவாக்குகிறது.

5000 mAH எனும் பெரிய கொள்ளளவு கொண்ட மின்கலமானது, பயனர்களுக்கு நீண்ட நேர பயன்பாட்டுக்கு உதவுகிறது, 19 மணிநேர தொடர்ச்சியான மொபைல் பயன்பாட்டுக்கு இசைவான திறனை அது கொண்டுள்ளது. OPPO A தொடர் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களினால் மெருகூட்டப்பட்டுள்ளது, அவை உயர்ந்த மற்றும் மேம்பட்ட ஒலி தரத்தை வழங்குகின்றன, மேலும் டொல்பி அட்மோஸ்® உடனான மிகச் சிறந்த ஒலி, வீடியோ மற்றும் கேமிங் அனுபவத்திற்கான ஒலி விளைவுகளை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் வழங்குகின்றன.

புதிய தசாப்தத்தின் தொடக்கத்தை கொண்டாடவும், புதிய தலைமுறை மொபைல் பயனர்களை வரவேற்கும் வகையில் A 2020 தொடர் என இவை பெயரிடப்பட்டுள்ளது. புதிய பெயருக்கு ஏற்றாற்போல் சமீபத்திய தொழில்நுட்பங்களையும் அது உள்ளடக்கியுள்ளது. OPPO A Series 2020 செப்டம்பர் 17 ஆம் திகதி அதன் உத்தியோகபூர்வ அறிமுகத்துடன் இலங்கை சந்தையில் வெளியிடப்படவுள்ளது.

OPPO பற்றி
வளர்ந்து வரும் உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான OPPO, கடந்த பத்து ஆண்டுகளாக நுகர்வோர் நடத்தை மற்றும் அபிலாஷைகளைப் பற்றிய ஆழமான நுண்ணறிவுக்கு ஏற்ப தொழில்நுட்ப முன்னேற்றங்களை மையமாகக் கொண்ட புதுமையான தொழில்நுட்பம், நுணுக்கமான வடிவமைப்பு மற்றும் கெமரா நிபுணத்துவம் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அசாதாரண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மொபைல் துறையில் சுழலும் கெமரா, அல்ட்ரா எச்டி அம்சம் மற்றும் 5 x டுவல் கெமரா Zoom தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை,  மொபைல் துறையில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட பல ஸ்மார்ட் கண்டுபிடிப்புகளில் அறிமுகப்படுத்திய முதல் வர்த்தக நாமம் OPPO ஆகும்.

2016 ஆம் ஆண்டில் செல்பி-மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, OPPO புதிய தொழில்நுட்பம் மற்றும் அதன் நுண்ணறிவு பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அதன் எல்லைகளை விரிவுபடுத்துகிறது. அதன் பல மாதிரிகள் மற்றும் வரம்புகள் மூலம் ஏராளமான வடிவமைப்புகள் மூலம் நுகர்வோர் அனைவரையும் அவர்களிடம் உருவாகி வரும் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது.

200 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோர் OPPO ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர், OPPO இன் வர்த்தகம் 35 நாடுகளையும் பிராந்தியங்களையும் உள்ளடக்கியதாகும். 400,000 இற்கும் மேற்பட்ட காட்சியறைகளைக் கொண்டுள்ளதுடன் உலகளாவிய ரீதியில் 4 ஆராய்ச்சி மையங்களைக் கொண்டுள்ளது. அதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சிறந்த ஸ்மார்ட்போன் புகைப்பட அனுபவத்தை வழங்கி வருகிறது.


Add new comment

Or log in with...