Friday, March 29, 2024
Home » இலங்கை குடிவரவு அதிகாரிகளுக்கு பயணிகள் அடையாள பயிற்சி வழங்கிய IOM

இலங்கை குடிவரவு அதிகாரிகளுக்கு பயணிகள் அடையாள பயிற்சி வழங்கிய IOM

by Rizwan Segu Mohideen
February 3, 2024 1:33 pm 0 comment

எல்லைக் கண்காணிப்புப் பிரிவில் (BSU) கடமையாற்றும் 15 குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு, ICAO பயணிகளை அடையாளம் காணும் திட்டம் (TRIP) உத்தி தொடர்பான பயிற்சியொன்று அண்மையில் இடம்பெற்றது.

சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பின் (ICAO) பயிற்சிப் பிரிவு மற்றும் இலங்கை விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்து அகடமி (SLAAA) ஆகியவற்றுடன் இணைந்து, புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு (Organization for Migration – IOM) இதனை முன்னெடுத்திருந்தது.

இந்த பயிற்சியின் முதன்மை நோக்கமானது, பயணிகளை அடையாளப்படுத்தும் திட்ட உத்தி பற்றிய ICAO அங்கீகாரம் பெற்ற பயிற்சியொன்றை இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு வழங்குவதாகும். இலங்கையின் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக, சர்வதேச தரத்திற்கு ஏற்றவாறு, தரப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பயணிகளின் அடையாள முகாமைத்துவ திறன்களை மேம்படுத்துவதை IOM இங்கு நோக்கமாகக் கொண்டுள்ளது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியை வழங்குவதன் மூலம், எல்லை நிர்வாகத்தை வலுப்படுத்தவும், பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் கண்ணியமான குடியேற்றம் மற்றும் குடிபெயர்பவர்களை மீளிணைப்பதற்கு பங்களிப்பை வழங்கவும் இத்திட்டம் முயற்சி செய்துள்ளது.

இந்தப் பயிற்சியின் முக்கியத்துவத்தை பற்றி தெரிவித்த குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய, இந்தப் பயிற்சியின் போது எமது குடிவரவு அதிகாரிகள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பையும் விடாமுயற்சியையும் பாராட்டுவதாக குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவான ஆதரவினாலும், புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் முயற்சிகள் மூலமும் இந்த திட்டம் சாத்தியமாகியுள்ளது என்றார்.

IOM ஶ்ரீ லங்கா தலைவர் சரத் டாஷ் தெரிவிக்கையில், “இந்த மைல்கல்லானது, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் அர்ப்பணிப்பை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், மூலோபாய கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல் மற்றும் ஒழுங்கற்ற இடம்பெயர்வுகளை எதிர்த்துப் போராடுவதற்கான திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் IOM இன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது என்றார்.

இந்நிகழ்வில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடந்த வாரம் இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. கட்டுப்பாட்டாளர் நாயகம்க, திணைக்களத்தின் சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகள், SLAAA ஊழியர்கள் மற்றும் IOM திட்டக்குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

IOM, ICAO, SLAAA ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பானது, குடியேற்றம் மற்றும் எல்லை நிர்வாகத்திற்கான வலுவான கட்டமைப்பை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு ஒரு சான்றாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்பட்ட European Readmission Capacity Building Facility (EURCAP) இன் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 காரணமாக நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களின் சமூக-பொருளாதாரத்திற்கு உதவி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT