7 பாகிஸ்தானியருக்கு நீர்கொழும்பு நீதிமன்று ஆயுள் தண்டனை | தினகரன்


7 பாகிஸ்தானியருக்கு நீர்கொழும்பு நீதிமன்று ஆயுள் தண்டனை

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு ஹெரோயின் கடத்திய, வியாபாரம் செய்த மற்றும் உடன் வைத்திருந்த ஏழு பேருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

இவர்களுள் ஆறு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

பொலிஸ் போதைவஸ்து தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஒரு பெண் உள்ளிட்ட மூன்று பாகிஸ்தான் பிரஜைகளும் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸ் போதைவஸ்து தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட நான்கு பாகிஸ்தானியப் பிரஜைகளுக்குமே மேற்படி ஆயுட் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் 2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் திகதியன்று 425கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அந்துல் கஷீப், 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் திகதியன்று 08கிலோ மற்றும் 628கிராம் ஹெரோயினுடன்

கைது செய்யப்பட்ட கான் அப்பாஸ், 2017 ஆம் ஆண்டு மே 14 ஆம் திகதியன்று 973 கிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட இக்ரம் மொஹமட், 2017 ஆம் ஆண்டு மே 26ஆம் திகதியன்று ஒரு கிலோ மற்றும் 26 கிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட மொசமட் நதீம், 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 07 ஆம் திகதியன்று 136 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட காதிர் சஹப்தா, 2017 ஓகஸ்ட் 07 ஆம் திகதியன்று 376 கிராம் மற்றும் 46 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட ஷாக்கிர் மொஹமட் மற்றும் 2017 ஓகஸ்ட் 07 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்ட 82 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடன் வைத்திருந்த காதிர் ஃபயிசா அலி எனும் பெண் என்போருக்கே ஆயுட் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

லக்ஷ்மி பரசுராமன் 


Add new comment

Or log in with...