காதலிப்பதாக கூறி யுவதியிடம் நகை கொள்ளை | தினகரன்


காதலிப்பதாக கூறி யுவதியிடம் நகை கொள்ளை

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மணோடை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தான் திருமணமானதை மறைத்து காதலிப்பதாக கூறி யுவதியை ஏமாற்றி நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

இது பற்றி தெரியவருவதாவது, 

செம்மணோடை பிரதேசத்தில் வாழும்  30வயது  இளைஞன் ஓட்டமாவடி 3ம் வட்டாரத்திலுள்ள திருமணமாகாத யுவதி ஒருவருடன் நெருக்கத்தை ஏற்படுத்தி அந்தப்பெண்ணை திருமணம் செயவதாக கூறி ஒன்றரை  இலட்சம் பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டதுடன், ஒரு தொகை பணத்தையும் அபகரித்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த இளைஞனை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(வாழைச்சேனை விசேட நிருபர்) 

 


Add new comment

Or log in with...