“கையோடு கூட்டி வாங்க” கவிதை நூல் வெளியீட்டு விழா | தினகரன்


“கையோடு கூட்டி வாங்க” கவிதை நூல் வெளியீட்டு விழா

கவிஞர் கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ் எழுதிய “கையோடு கூட்டி வாங்க” கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணிக்கு நீர்கொழும்பு அல்ஹிலால் மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் எம். எம். முஹம்மத் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் திக்குவல்லை கமால், லேக்ஹவுஸ் தமிழ் வெளியீடுகள் ஆலோசகர் எம். ஏ. எம். நிலாம், விடிவெள்ளி ஆசிரியர் எம். பீ. எம். பைரூஸ், நவமணி ஆசிரியர் என். எம். அமீன், கலைவாதி கலீல், என். நஜ்முல் ஹுசைன் உட்பட பலரும் உரையாற்றவுள்ளனர்.

நூலின் முதற் பிரதியை பிரபல தொழிலதிபர் எம். ஜே. எம். ருஸ்தீன் பெற்றுக்கொள்வார். பெரியமுல்லை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் மௌலவி எம். எஸ் எம். பரூத், மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் ஷாபி ரஹீம், எம். எஸ். எம். சகாவுள்ளா, நீர்கொழும்பு மாநகர பிரதி முதல்வர் எம். ஏ. இஸட். பரீஸ், தொழிலதிபர் நளீர் மரிக்கார், பர்ஹான் ஆகியோர் கிறப்புப் பிரதிகளை பெற்றுக்கொள்வர்.

 


Add new comment

Or log in with...