பாதுகாப்பு ஆலோசகரை பணி நீக்கினார் ட்ரம்ப் | தினகரன்


பாதுகாப்பு ஆலோசகரை பணி நீக்கினார் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டனைப் பணிநீக்கம் செய்துள்ளார். தமது முடிவை ட்விட்டர் பதிவில் ட்ரம்ப் விளக்கியுள்ளார்

போல்ட்டன் பரிந்துரைத்த பல ஆலோசனைகள் தமக்கு ஏற்புடையவையாக இல்லை என்றும் தமது நிர்வாகத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களும் போல்ட்டனின் கருத்துகளுக்கு உடன்படவில்லை என்றும் ட்ரம்ப் கூறினார்.

போல்ட்டனின் சேவைகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட ட்ரம்ப், தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவியேற்கும் புதிய நபரின் பெயர் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

2018 ஏப்ரல் மாதம் தொடக்கம் பதவி வகித்த போல்டல், மைக்கல் பிளைன் மற்றும் மன்மாஸ்டருக்கு அடுத்து டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோகசராக பணியாற்றிய மூன்றாமவராவார்.

போரை அதிகமாகச் சார்ந்த வெளியுறவுக் கொள்கையைக் கொண்டுள்ள போல்ட்டன், ஈரானியத் தலைவர்களைத் ட்ரம்ப் சந்திப்பதைத் தொடர்ந்து எதிர்த்து வந்தார். அத்துடன் ரஷ்யா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு எதிராக மேலும் கடுமையான வெளியுறவுக் கொள்கைளுக்குத் அவர் குரல்கொடுத்தார்.


Add new comment

Or log in with...