சிம்பாப்வே கொண்டுவரப்பட்ட ரொபர்ட் முகாபேவின் உடல் | தினகரன்


சிம்பாப்வே கொண்டுவரப்பட்ட ரொபர்ட் முகாபேவின் உடல்

சிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் உடல் சொந்த நாட்டில் அடக்கம் செய்யப்படுவதற்காக சிங்கப்பூரில் இருந்து நேற்று சிம்பாப்வேயுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த முகாபே 95 வயதில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

சுமார் 40 ஆண்டுகளாக சிம்பாப்வேயின் அரசியலில் இருந்த முகாபே 2017ஆம் ஆண்டு பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

சிம்பாப்வே தலைநகர், ஹராரேயில் உள்ள விளையாட்டரங்கத்தில் இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளதோடு அடுத்த நாள் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூரில் முகாபே உடலுக்கு சிறப்பு இரங்கல் நிகழ்வு நடந்தது. இதில் முகாபேவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சிம்பாப்வே அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து முகாபே உடல் சிம்பாப்வேயுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை முகாபே குடும்பத்தார் உறுதிப்படுத்தியுள்ளனர். முகாபே உடல் அவரது சொந்த கிராமமான குட்டாமாவுக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் ரோபேரோ மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.


Add new comment

Or log in with...