ஆசிய கண்டத்தில் நாங்கள் அபாயகரமான அணி | தினகரன்


ஆசிய கண்டத்தில் நாங்கள் அபாயகரமான அணி

ஆப்கானிஸ்தான் விக்கெட் காப்பாளர்

ஆசிய கண்ட சீதோஷ்ண நிலையில் நாங்கள் அபாயகரமான அணி என்று ஆப்கானிஸ்தான் விக்கெட் காப்பாளர் அப்சர் சசாய் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாட உத்வேகமாக இருக்கும் என ஆப்கானிஸ்தான் வீரர்கள் நம்புகிறார்கள்.

இந்நிலையில் ஆசிய கண்ட சீதோஷ்ண நிலையில் நாங்கள் அபாயகரமான அணி என்று ஆப்கானிஸ்தான் விக்கெட் காப்பாளர் அப்சர் சசாய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அப்சர் சசாய் கூறுகையில் ‘‘உண்மையிலேயே நாங்கள் ஒரு டெஸ்ட் அணி நாடு என்ன நம்பிக்கையில் உள்ளோம். எங்களது நாட்டில் சிறந்த திறமை படைத்தவர்களாக உள்ளோம். உள்ளூர் லெவலில் முதல் தர போட்டிகளில் விளையாடி வருகிறோம். எங்கள் மண்ணில் திறமை வாய்ந்த துடுப்பாட்டவீரர்கள், பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதனால் எங்களுடைய எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது.

டெஸ்ட், ஒருநாள், ரி20 கிரிக்கெட்டிற்கென தனித்தனி வீரர்கள் இருப்பது சிறப்பானது. குறிப்பாக, டெஸ்ட் போட்டிக்கென அதிக வீரர்கள் இருக்க வேண்டும். ஏனென்றால் இது எங்களுக்கு புதிய வடிவம். எங்களுடைய திறன்களில் அதிக அளவில் உழைப்பது அவசியம்.

இந்தியாவில் நாங்கள் பயிற்சி மேற்கொள்வது எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. ஆசிய கண்ட சீதோஷ்ண நிலையில் நாங்கள் அபாயகரமான அணி. தரமான சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள நாங்கள், துடுப்பாட்டத்தில் ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடினால், தற்போதைய தினத்தில் நாங்கள் அபாயகரமான அணி என்பதை நம்புகிறோம்’’ என்றார்.


Add new comment

Or log in with...