ஆசிய கரப்பந்தாட்ட போட்டி: இலங்கை சிரேஷ்ட ஆண்கள் அணி ஈரான் பயணம் | தினகரன்


ஆசிய கரப்பந்தாட்ட போட்டி: இலங்கை சிரேஷ்ட ஆண்கள் அணி ஈரான் பயணம்

ஈரானில் நடைபெறவுள்ள ஆசிய சிரேஷ்ட கரப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்ளும் தீப்தி ரொஷான் தலைமையிலான இலங்கை தேசிய அணி நேற்று புதன்கிழமை காலை (11/9) ஈரான் நோக்கி பயணமானது. இப் போட்டிகள் நாளை 13 திகதி முதல் 22 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஈரான் தெஹ்ரான் நடைபெறவுள்ளன 16 நாடுகள் பங்குபற்றும் இப் போட்டியில் இலங்கை அணி ஏ பிரிவில் போட்டியிடுவதுடன் ஏ பிரிவில் ஈரான்,அவுஸ்திரேலியா மற்றும் கட்டார் அணிகளுடன் முதல் சுற்றில் போட்டியிட உள்ளது. இலங்கை அணி கலந்து கொள்ளும் முதல் போட்டி நாளை 13 ஆம் திகதி ஈரானுடனும் 14 ஆம் திகதி அவுஸ்திரேலியா உடனும் 15 ஆம் திகதி கட்டாருடனும் மோதவுள்ளது.

இலங்கை அணியின் பிரதான பயிற்சியாளராக மெனுவெல் தோரேஸ்ஸும், உதவி பயிற்சியாளராக சுசிரி மங்களவும், உடற்பயிற்சியாளராக சாலிக்க ராஜபக்ஷவும் மற்றும் முகாமையாளராக சமன் அபேவர்த்தன ஆகியோரும் பணியாற்றுகின்றனர்.

களுத்துறை சுழற்சி நிருபர்


Add new comment

Or log in with...