வாள்களுடன் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர்கள் மடக்கிப்பிடிப்பு | தினகரன்


வாள்களுடன் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர்கள் மடக்கிப்பிடிப்பு

வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டுக்குள் வாளுடன் புகுந்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த மூன்று இளைஞர்களை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.  

இச்சம்பவம் நேற்று (11) புதன்கிழமை காலை 7.30மணியளவில் இடம்பெற்றது. இதுபற்றித் தெரிய வருவதாவது: 

குறித்த வீட்டிலுள்ள ஒருவருக்கும் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த இளைஞர்களுக்குமிடையில்  

அன்றைய தினம் சிறிய வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. 

பின்னர் வாய்த்தர்க்கத்திலீடுபட்ட இளைஞர்கள்  அவ்விடத்தை விட்டுச் சென்றபின்னர், மூன்று இளைஞர்கள் வாள்களுடன் முச்சக்கரவண்டியில் வந்துள்ளனர்.இம்மூவரும் வீட்டாரை ​ெவளியே அழைத்து அவர்களைத் தாக்க முயற்சித்தனர். 

இதை அவதானித்த அயலவர்கள் தாக்குதலை முறியடித்தனர்.பின்னர் அம்மூவரையும் பிடித்து வீட்டுக்குள் அடைத்து வைத்த அயலவர்கள்,  119தொலைபேசி இலக்கம் மூலம் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.  

மூன்று மணிநேரம் கடந்தும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தராததால், கிராமத்தவர் இரு தரப்பினருடனும் கலந்துரையாடியதுடன் இளைஞர்களிடமிருந்த வாளையும் வாங்கிக் கொண்டனர். 

இவ்வாறான சட்டவிரோத செயல்களில் இனிமேல் ஈடுபடுவதில்லை எனவும் அவ்விளைஞர்கள்  

கிராமத்தவர்களிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

வவுனியா விசேட நிருபர்  


Add new comment

Or log in with...