3 கெமராக்கள் கொண்ட புதிய ஐபோன் அறிமுகம் | தினகரன்


3 கெமராக்கள் கொண்ட புதிய ஐபோன் அறிமுகம்

கைபேசி நிறுவனங்களிடையே நிலவும் கடுமையான போட்டிக்கு இடையே அப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐபோன் வகையை அறிமுகம் செய்துள்ளது.

மூன்று கெமராக்கள் கொண்ட புதிய திறன்பேசியுடன் மாதாந்திர இணைய ஒளிபரப்புச் சேவையையும் அந்த நிறுவனம் அறிமுகம் செய்தது.

இரு பின் கெமராக்கள் கொண்ட மேம்பட்ட ஐபோன் 11 கைபேசிகளின் விலை 699 டொலர்களாகும். கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் கைபேசிகளைவிட அதன் விலை குறைவாகவுள்ளது.

மூன்று பின் கெமராக்கள் கொண்ட ஐபோன் 11 புரோவின் விலை 999 டொலர்களாகும். சற்று பெரிய திரையைக் கொண்ட ஐபோன் 11 புரோ மெக்ஸ் 1,099 டொலருக்கு விற்பனையாகும். நாளை வெள்ளிக்கிழமை முதல் கைபேசிகளுக்கு முன்பதிவு செய்யலாம். செப்டம்பர் 20ஆம் திகதியிலிருந்து அவை விநியோகம் செய்யப்படும்.

புதிய அப்பிள் டீவி பிளஸ் ஒளிபரப்புச் சேவை நவம்பர் முதல் 100 நாடுகளில் அறிமுகம் செய்யப்படும். அதற்கான மாதக் கட்டணம் 5 டொலர் மட்டுமே.


Add new comment

Or log in with...