அம்பாறையில் பலத்த காற்று, மழை | தினகரன்


அம்பாறையில் பலத்த காற்று, மழை

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று (12)  பகல் திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழையினால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். 

அம்பாறை நகரப்பகுதி, அட்டாளைச்சேனை, நிந்தவூர், அக்கரைப்பற்று, காரைதீவு, கல்முனை, மருதமுனை, பெரியநீலாவணை மற்றும் சம்மாந்துறை போன்ற பகுதிகளில்  வீசிய சுழல் காற்றுக் காரணமாக வீதிகளில் அதிகளவிலான தூசு மண் வீசப்பட்டன. இதனால் பயணிகள் அசெளகரியத்திற்கு உள்ளாகினர்.  சில பகுதிகளில் பாரிய மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் வீதிப் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட்டன.

சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தன. 

தற்போது காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்வதாக, அம்பாறை மாவட்ட செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.முகம்மட் றியாஸ்  தெரிவித்தார்,  

(பெரியநீலாவணை விசேட நிருபர்– சினாஸ் ஆதம் லெப்பை)

 


Add new comment

Or log in with...