கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ விபத்து; பெண் பலி | தினகரன்


கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ விபத்து; பெண் பலி

மஹரகம, பொல்வத்த பிரதேசத்தில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பன்னிப்பிட்டிய நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று, சொகுசு பஸ் வண்டியொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பன்னிப்பிட்டியவிலிருந்து தலவத்துகொட நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பஸ் வண்டி ஒன்றுடனையே முச்சக்கரவண்டி இவ்வாறு மோதியுள்ளது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டிச் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டிச் சாரதி மற்றும் அதில் பயணித்த பெண்ணொருவர் படுகாயமடைந்ததை தொடர்ந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது, முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் உயிரிழந்துள்ளார்.

பதுளையைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு, முச்சக்கரவண்டிச் சாரதி மேலதிக சிகிச்சைக்காக ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Add new comment

Or log in with...