அம்பாறையில் கைதான 11 பேரும் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் | தினகரன்


அம்பாறையில் கைதான 11 பேரும் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம்

அம்பாறை பொலிஸாரினால் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ‘ஜமாதே மில்லதே இப்ராஹீம்” என்ற இயக்கத்தைச் சேர்ந்த 11பேர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தகவல் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

அரச புலனாய்வு சேவை வழங்கிய தகவலின் பேரில் அம்பாறை பொலிஸார் இவர்களை கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட 11 பேரும் மொஹம்மட் மன்சூர் சைபுள்ளா, மொஹம்மட் ரியாஸ்  மொஹம்மட் சஹீட், முஸ்தாக் அலி ஹம்ஹர், மொஹம்மட் தாஹிர் ஹிதாயத்துல்லா, மொஹம்மட் ரம்சின் ருப்து அஹமட், மொஹிதீன் பவா மொஹம்மட் ரூமி, அப்துல் ஹலீம் மொஹம்மட் ஹிமாஸ், மொஹம்மட் காசிம் மொஹம்மட் ஹகீல், ஹிஸ்புல்லா பாஸ் ஹுஸ்னி அஹமட், மொஹம்மட் சஹீல், மொஹம்மட் ஹஸன், மொஹம்மட் ஹவ்தக் அனீஸ் மொஹம்மட் என இனங்காணப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...