டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைகளை பதிவு செய்த ரஷித் கான் | தினகரன்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைகளை பதிவு செய்த ரஷித் கான்

இளம் வயதில் தலைவராக பதவி ஏற்ற ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் சிறப்புமிக்க சாதனைகளை பதிவு செய்துள்ளார்.

பங்களாதேஷ் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் சட்டோகிராமில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் 224 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக ரஷித் கான் செயல்பட்டார். இளம் வயதில் தலைவர் பொறுப்பை ஏற்ற ரஷித் கான் சிறப்புமிக்க வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார்.

1. டெஸ்ட் போட்டியில் இளம் வயதில் தலைவர் பொறுப்பை ஏற்ற வீரர் என்ற சாதனைப் படைத்த ரஷித் கான், அறிமுக போட்டியிலேயே வெற்றி பெற்ற தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

2. தலைவராக அறிமுகமான போட்டியிலேயே அரைசதம் அடித்ததுடன் 10 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

3. ஆட்ட நாயகன் விருதையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

4. டெஸ்ட் போட்டிகள் விளையாடும் 10 நாட்டிற்கு எதிராக தோல்வியை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை பங்களாதேஷ் பதிவு செய்துள்ளது.


Add new comment

Or log in with...