கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை | தினகரன்

கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, ஹிக்கடுவை முதல் காலி ஊடாக மாத்தறை வரை கடற்கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 70 - 80 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதோடு, மீனவர்கள் மற்றும் கடற்றொழிலில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்தோடு புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரை கடற்கரையோர பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 


Add new comment

Or log in with...