கலைஞர்களுக்கு மாதாந்தம் ரூபா 5000 கொடுப்பனவு! | தினகரன்


கலைஞர்களுக்கு மாதாந்தம் ரூபா 5000 கொடுப்பனவு!

60 வயதுக்கு மேற்பட்ட சிரேஸ்ட கலைஞர்களுக்கு மாதாந்தம் ரூபா 5000 வீதம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக ஊக்குவிப்பு அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 200 சிரேஸ்ட கலைஞர்களுக்கு முதலாவது கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.அரசாங்கத்தினால் கலைஞர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 94 மில்லியன் ரூபாவுக்கு கிடைக்கும் வட்டியின் மூலம் இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கலாச்சார அமைச்சு மற்றும் சமூக பாதுகாப்பு சபையின் மூலம் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன் சமூக பாதுகாப்பு சபையினால் நடத்தப்படுகிறது.

ஐக்கிய தேசிய கலைஞர் அமைப்பு, பாடகர்களின் சங்கம், தேசிய கலை அமைப்பு, மொரட்டுவ கலை ஒன்றியம் உள்ளிட்ட கலை சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளின் பங்களிப்புடன் ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்ள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ செய்தித் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...