அநுராதபுர மாவட்டத்தில் வரட்சி வலய அபிவிருத்தி திட்டம் | தினகரன்


அநுராதபுர மாவட்டத்தில் வரட்சி வலய அபிவிருத்தி திட்டம்

அமைச்சரவை அனுமதி

வரட்சி வலய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக அநுராதபுர மாவட்டத்தில் 331 மில்லியன் ரூபா நிதி உதவியில் 2019 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கும் இதன் கீழ் விவசாயத்தினை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (10) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வரட்சி வலய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக அநுராதபுர மாவட்டத்தில் 331 மில்லியன் ரூபா நிதி உதவியில் 2019 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கும் இதன் கீழ் விவசாயத்தினை அபிவிருத்தி செய்தல், விவசாய பாதைகளை புனரமைத்தல், பயனாளிகளுக்காக விவசாய உபகரணங்கள் விநியோகித்தல், சமூக மண்டபத்தை நிர்மாணித்தல் போன்ற பணிகளுக்காக 204 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிப்பதற்கும் சுத்தமான குடிநீரை விநியோகித்தல் மனை மற்றும் சிறிய கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் மேம்படுத்துதல் பயிற்சி மற்றும் தெளிவுபடுத்தல், விவசாய கைத்தொழில் துறையை பயனுள்ள வகையில் அபிவிருத்தி செய்தல் ஆகிய பணிகளை 127 மில்லியன் ரூபா நிதியில் நிறைவேற்றுவதற்கும் அனமதியளிக்கப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மற்றும் வரட்சி வலய அபிவிருத்தி அமைச்சர் சந்திராணி பண்டார சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...