4667 பட்டதாரிகளை பயிற்சியாளர்களாக இணைத்துக் கொள்ளல் | தினகரன்


4667 பட்டதாரிகளை பயிற்சியாளர்களாக இணைத்துக் கொள்ளல்

பட்டதாரி பயிற்சியாளர் பதவிகளுக்காக உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டதாரிகள் 4667 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்கள் இந்த மாதம் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சரவைத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (10) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே பிரதமரினால் முன்வைக்கப்பட்ட இம் முன்மொழிவை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.

அமைச்சரவையினால் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்ட்ட தீர்மானத்திற்கு அமைவாக தற்பொழுது வெற்றிடமாக உள்ள 4667 பட்டதாரி பயிற்சியாளர் பதவிகளுக்காக 45 வயது வரையறைக்குள் இருக்கும் உள்ளக மற்றும் வெளிவாரி பட்டதாரிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி கால அடிப்படை முறைக்கு அமைவாக 2012 ஆம் ஆண்டு தொடக்கம் பட்டத்தை பூர்த்தி செய்துள்ள பட்டதாரிகளை பயிற்றுவிப்பதற்காக 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று பிரதமரும் தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு புனர்வாழ்வு வடக்கு மாகாண அபிவிருத்தி இளைஞர் அலுவல்கள் அமைச்சர் முன்வைத்த அறிவிப்பை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.


Add new comment

Or log in with...