பொலன்னறுவைக்கு சொகுசு புகையிரத சேவை | தினகரன்


பொலன்னறுவைக்கு சொகுசு புகையிரத சேவை

இலங்கை புகையிரத திணைக்களமானது,  எஸ் 13 வகை எனும் சொகுசு புகையிரத சேவையொன்றை கொழும்பு, கோட்டையிலிருந்து பொலன்னறுவைக்கு இன்று (11) முதல் ஆரம்பிக்கவுள்ளது.  

புலதிசி எனும் பெயரில் குறித்த  சொகுசு  புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெறவுள்ளதோடு, இதன் முதற் பயணத்தில் ஜனாதிபதி இணைந்து கொள்ளவுள்ளார்.

கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தின் மூன்றாவது மேடையிலிருந்து புலதிசி கடுகதி புகையிரதம் இன்று மாலை 3.05 மணிக்கு அதன் முதற் பயணத்தை தொடங்கவுள்ளது.

இவ்வாறு புறப்படும் குறித்த புலதிசி புகையிரதம் இன்றிரவு 7.45 மணிக்கு பொலன்னறுவையை சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த புகையிரதம், பொலன்னறுவையிலிருந்து நாளை (12) மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு கொழும்பு, கோட்டை நோக்கி பயணிக்கவுள்ளதோடு, இரவு 9.06 மணிக்கு கொழும்பு, கோட்டையை வந்தடையவுள்ளது.

பொலன்னறுவை, குருணாகல், மஹவ, கெக்கிராவ, ஹபரண, ஹிங்குராக்கொட ஆகிய ரயில் நிலையங்களில் குறித்த புகையிரதம் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 


Add new comment

Or log in with...